
image courtesy:IPL
ஐ.பி.எல். வரலாற்றில் கொல்கத்தா அணிக்காக மாபெரும் சாதனை படைத்த குயின்டன் டி காக்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா - ராஜஸ்தான் அணிகள் மோதின.
கவுகாத்தி,
18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்றிரவு அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக துருவ் ஜூரெல் 33 ரன்கள் அடித்தார். கொல்கத்தா தரப்பில் வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, மொயீன் அலி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் 152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 153 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக குயின்டன் டி காக் 97 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் ஐ.பி.எல். வரலாற்றில் சேசிங்கின்போது கொல்கத்தா அணிக்காக அதிக ரன் குவித்த வீரராகவும் குயின்டன் டி காக் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்:-
1. குயின்டன் டி காக் - 97 ரன்கள்
2. மனீஷ் பாண்டே - 94 ரன்கள்
3. கிறிஸ் லின் - 93 ரன்கள்
4.பிஸ்லா - 92 ரன்கள்
5. கவுதம் கம்பீர் - 90 ரன்கள்