< Back
கிரிக்கெட்
டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை - ஜெய்ஷா அறிவிப்பு
கிரிக்கெட்

டி20 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத்தொகை - ஜெய்ஷா அறிவிப்பு

தினத்தந்தி
|
30 Jun 2024 7:51 PM IST

டி20 உலக்கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பி.சி.சி.ஐ. பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வந்த 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் ஜெய்ஷா கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ. 125 கோடியை பரிசுத்தொகையாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், " ஐ.சி.சி. ஆண்கள் டி20 உலகக்கோப்பை 2024ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தொடர் முழுவதும் இந்திய அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துகள்!" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்