< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: முன்னணி வீரர்களுடன் அறிவிக்கப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணி
|9 Nov 2024 2:26 AM IST
இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டி20 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்படாஸ்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் முதல் 2 போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முன்னணி வீரர்களான ரசல், நிக்கோலஸ் பூரன் மற்றும் ஹெட்மயர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவராம் பின்வருமாறு:-
ரோவ்மன் பவல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ், மேத்யூ போர்ட், ஹெட்மயர், டெர்ரன்ஸ் ஹிண்ட்ஸ், ஷாய் ஹோப், அகீல் கொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், எவின் லூயில், குடகேஷ் மோடி, பூரன், ரசல், ரூதர்போர்டு மற்றும் ஷெப்பர்ட்.