பெர்த் டெஸ்ட்; இந்தியாவின் ஆடும் லெவனை தேர்வு செய்த ரவி சாஸ்திரி
|இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது.
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதில் இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்த தொடரில் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற நெருக்கடிக்கு மத்தியில் இந்தியா விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்தியாவின் ஆடும் லெவனை இந்திய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியில் ரோகித் விளையாடுவதில் சந்தேகம் நிலவுவதால் அவருக்கு இடம் அளிக்கப்படவில்லை.
இதன் காரணமாக தொடக்க வீரர்களாக சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வாலை அவர் தேர்வு செய்துள்ளார். மேலும் 3வது இடத்தில் ராகுலை தேர்வு செய்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக இந்த அணியில் சர்பராஸ் கான், அஸ்வினுக்கு இடம் இல்லை. துருவ் ஜுரெல், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
ரவி சாஸ்திரி தேர்வு செய்த இந்திய ஆடும் லெவன் விவரம்;
சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா அல்லது வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்.