< Back
கிரிக்கெட்
பெர்த் டெஸ்ட்:  நடுவர்களின் விவரங்களை அறிவித்த ஐசிசி

Image : AFP 

கிரிக்கெட்

பெர்த் டெஸ்ட்: நடுவர்களின் விவரங்களை அறிவித்த ஐசிசி

தினத்தந்தி
|
21 Nov 2024 3:04 PM IST

கடந்த 2 பார்டர் -கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

பெர்த்,

கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை தொடங்குகிறது. கிரிக்கெட் உலகின் பலம் வாய்ந்த இரு அணிகள் மோத உள்ளதால் இந்த தொடர் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மேலும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் -கவாஸ்கர் கோப்பை தொடர்களையும் இந்தியா கைப்பற்றியுள்ளது. இதனால் தொடர்ந்து 3-வது முறையாக வெல்லும் முனைப்புடன் இந்தியா களமிறங்க உள்ளது. அதே வேளையில் சொந்த மண்ணில் இந்தியாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலியா களமிறங்க உள்ளது. இந்த நிலையில், இந்த போட்டிக்கான நடுவர்கள் விவரத்தை ஐசிசி அறிவித்துள்ளது.

கள நடுவர்கள்: ரிச்சர்ட் கெட்டில்பரோ (இங்கிலாந்து) , கிறிஸ் கபேனி (நியூசிலாந்து).

3-வது நடுவர்: ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து).

4-வது நடுவர் : சாம் நோகாஜ்ஸ்கி (ஆஸ்திரேலியா).

மேலும் செய்திகள்