< Back
கிரிக்கெட்
படிதார் அதிரடி அரைசதம்... சென்னைக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

Image Courtesy: @IPL / @ChennaiIPL / @RCBTweets

கிரிக்கெட்

படிதார் அதிரடி அரைசதம்... சென்னைக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

தினத்தந்தி
|
28 March 2025 9:13 PM IST

பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார்.

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் சென்னையில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பில் சால்ட் மற்றும் விராட் கோலி களம் இறங்கினர். இதில் பில் சால்ட் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினார். அதிரடியாக ஆடிய அவர் 16 பந்தில் 32 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த படிக்கல் 27 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து விராட் கோலியுடன் கேப்டன் படிதார் ஜோடி சேர்ந்தார்.

நிதானமாக ஆடி வந்த இந்த இணையில் விராட் கோலி 31 ரன் எடுத்து அவுட் ஆனார். தொடந்து களம்இறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 10 ரன்னிலும், ஜித்தேஷ் சர்மா 12 ரன்னிலும் அவுட் ஆகினர். மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய படிதார் அரைசதம் அடித்த நிலையில் 51 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை ஆட உள்ளது.

மேலும் செய்திகள்