< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.சி.சி. டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை: விராட் கோலியை முந்திய ரிஷப் பண்ட்
|23 Oct 2024 3:29 PM IST
டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.
துபாய்,
இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி மற்றும் பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
அதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இங்கிலாந்து வீர்ர ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். இந்தியாவின் ஜெய்ஸ்வால் 4-வது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேற்றம் கண்டு கோலியை தாண்டி 6-வது இடத்திலும், விராட் கோலி (ஒரு இடம் சரிந்து) 8-வது இடத்திலும் உள்ளனர்.
இதன் பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை. பும்ரா மற்றும் ஜடேஜா மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகின்றனர்.