< Back
கிரிக்கெட்
ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை வென்ற பாகிஸ்தான் வீரர்

தினத்தந்தி
|
12 Nov 2024 2:58 PM IST

ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர் வென்றுள்ளார்.

துபாய்,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐ.சி.சி அறிவித்திருந்தது.

அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் பாகிஸ்தானின் நோமன் அலி, தென் ஆப்பிரிக்காவின் ககிசோ ரபாடா, நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னெர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இதேபோல், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய ஐ.சி.சி வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் நியூசிலாந்தின் மெலி கெர், தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட், வெஸ்ட் இண்டீசின் டியான்ட்ரா டாட்டின் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருதை வென்றவர்கள் விவரங்களை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டது. அதன்படி, ஐ.சி.சி-யின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை பாகிஸ்தானின் நோமன் அலியும், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை நியூசிலாந்தின் மெலி கெர்ரும் வென்றுள்ளனர்.



மேலும் செய்திகள்