< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்..? - வெளியான தகவல்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர்..? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
18 Nov 2024 8:28 AM IST

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது.

கராச்சி,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த தொடருக்கு முன் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பாகிஸ்தான் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கேரி கிர்ஸ்டன் பதவி விலகினார்.

இதையடுத்து டெஸ்ட் அணியின் தலைமை பயிற்சியாளர் கில்லெஸ்பி (ஆஸ்திரேலியா) ஒரு நாள் மற்றும் 20 ஒவர் போட்டி அணிக்கு இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் கில்லெஸ்பியை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மூன்று வடிவிலான போட்டிக்கும் ஒரே பயிற்சியாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆகிப் ஜாவித்தை (வயது 52) நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முன்னதாக புதிய பயிற்சியாளர் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்