கிரிக்கெட்
2வது டெஸ்ட்டில் பீல்டிங் செய்தபோது காலில் காயம்; சிகிச்சைக்கு இங்கிலாந்து செல்லும் வீரர்
கிரிக்கெட்

2வது டெஸ்ட்டில் பீல்டிங் செய்தபோது காலில் காயம்; சிகிச்சைக்கு இங்கிலாந்து செல்லும் வீரர்

தினத்தந்தி
|
8 Jan 2025 5:56 AM IST

2வது டெஸ்ட்டில் பீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக அவர் இங்கிலாந்து செல்கிறார்.

லண்டன்,

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டி20, டெஸ்ட் தொடர்களை தென் ஆப்பிரிக்காவும், ஒருநாள் தொடரை பாகிஸ்தானும் வென்றது.

இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் கடந்த 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தபோது 7வது ஓவரில் ரையன் ரிக்கெல்டன் அடித்த பந்தை பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சையிம் ஆயுப் பிடிக்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக சையிம் ஆயுப் தவறி விழுந்தார். இதில் அவரது காலில் காயம், தசைபிடிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மைதானத்தில் இருந்து உடனடியாக வெளியேறினார்.

இந்நிலையில், பீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து சிகிச்சைக்காக பாகிஸ்தான் வீரர் சையிம் ஆயுப் இங்கிலாந்து செல்கிறார். காயத்தில் இருந்து குணமாக 6 மாதங்களுக்கு மேல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடுத்துவரும் கிரிக்கெட் தொடர்களில் சையிம் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்