< Back
கிரிக்கெட்
40 செ.மீ.தான்... பும்ராவுக்கும் மற்ற பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் - பாக்.முன்னாள் வீரர்
கிரிக்கெட்

40 செ.மீ.தான்... பும்ராவுக்கும் மற்ற பவுலர்களுக்கும் உள்ள வித்தியாசம் - பாக்.முன்னாள் வீரர்

தினத்தந்தி
|
29 Nov 2024 9:54 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பும்ரா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் பும்ரா 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

தற்சமயத்தில் உலகின் நம்பர் 1 பவுலராக செயல்பட்டு வரும் ஜஸ்பிரித் பும்ரா, 3 வகையான கிரிக்கெட்டிலும் தனித்துவமான பவுலிங் ஆக்சனை வைத்து எதிரணிகளை திணறடித்து வருகிறார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருது வென்ற அவர் 17 வருடங்கள் கழித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.

இந்நிலையில் பந்தை வெள்ளைக் கோட்டிலிருந்து பும்ரா 40 சென்டிமீட்டர் முன்னதாக கையில் இருந்து விடுவதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். அதனால் பந்து தரையில் பட்டதும் அதிகப்படியான வேகத்தில் வருவதாக அவர் கூறியுள்ளார். அதனாலேயே மற்ற பவுலர்களை காட்டிலும் அவரை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாக வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "பும்ரா பந்தை கை பின்னால் இருந்து வீசுகிறார். அந்த ஆக்சன் குறிப்பிட்ட பிட்ச்களில் பேட்ஸ்மேன் எதிர்பார்க்காத வகையில் பந்தை சறுக்குகிறது. மேலும் பந்து குறைவான உயரத்தில் வருவதால் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள தடுமாறுகிறார்கள். அது இயற்கையானது. இறுதியில் மணிக்கட்டை ப்ளிக் செய்வது மிகவும் கடினம்.

மேலும் பும்ரா பந்தை ரிலீஸ் செய்யும் இடம் கிட்டத்தட்ட 40 சென்டி மீட்டர் முன்னே இருக்கிறது. அது மற்றவர்களை காட்டிலும் இந்த வேகத்துக்கு பெரிய வித்தியாசம். அதனாலேயே அவருடைய பந்துகள் தரையில் பட்டதும் சறுக்கிக்கொண்டு செல்கிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்