< Back
கிரிக்கெட்
ஒருநாள் போட்டி; நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

கோப்புப்படம்

கிரிக்கெட்

ஒருநாள் போட்டி; நியூசிலாந்துக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
13 Nov 2024 2:10 PM IST

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடக்கிறது.

தம்புல்லா,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் இன்று தொடங்க உள்ளது. அதன்படி இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புல்லா மைதானத்தில் இன்று நடக்கிறது. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்