< Back
கிரிக்கெட்
ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர்கள்

image courtesy; AFP

கிரிக்கெட்

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை; முதலிடத்தில் பாகிஸ்தான் வீரர்கள்

தினத்தந்தி
|
13 Nov 2024 5:36 PM IST

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் (825 புள்ளி) முதல் இடத்தில் உள்ளார்.

துபாய்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடியது. இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியது. இந்நிலையில், இந்த தொடர் நிறைவடைந்ததை அடுத்து ஆடவருக்கான ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வெளியிட்டுள்ளது.

ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் பாபர் அசாம் (825 புள்ளி) முதல் இடத்திலும், இந்தியாவின் ரோகித் சர்மா (765 புள்ளி) 2-ம் இடத்திலும், சுப்மன் கில் (763 புள்ளி) 3ம் இடத்திலும், விராட் கோலி (746 புள்ளி) 4வது இடத்திலும் உள்ளனர்.

இதே போல் ஒருநாள் போட்டிக்கான பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடி (696 புள்ளி) 3 இடம் உயர்ந்து முதல் இடத்திற்கு வந்துள்ளார். ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (687 புள்ளி) 2ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ் (674 புள்ளி) 3ம் இடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் (665 புள்ளி) 4ம் இடத்திலும் உள்ளனர்.

இதேபோல் ஒருநாள் போட்டிக்கான ஆல் ரவுண்டர்கள் தரவரிசை பட்டியலில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி (318 புள்ளி), ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா (288 புள்ளி), ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் (254 புள்ளி) முதல் 3 இடங்களில் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான அணிகள் தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களில் முறையே இந்தியா (118 புள்ளி), ஆஸ்திரேலியா (113 புள்ளி), பாகிஸ்தான் (109 புள்ளி), தென் ஆப்பிரிக்கா (106 புள்ளி), நியூசிலாந்து (101 புள்ளி) அணிகள் உள்ளன.

மேலும் செய்திகள்