< Back
கிரிக்கெட்
கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் - மும்பை அணியின் நிராகரிப்பால் பிரித்வி ஷா வருத்தம்

கோப்புப்படம்

கிரிக்கெட்

கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும் - மும்பை அணியின் நிராகரிப்பால் பிரித்வி ஷா வருத்தம்

தினத்தந்தி
|
18 Dec 2024 9:11 AM IST

விஜய் ஹசாரே கோப்பைக்கான மும்பை அணியில் பிரித்வி ஷா இடம் பெறவில்லை.

மும்பை,

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான முதல் 3 ஆட்டத்துக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. 17 பேர் கொண்ட இந்த அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிர்ச்சி அளிக்கும் விதமாக இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷாவுக்கு இடம் கிடைக்கவில்லை. சமீபத்தில் நடந்த சையத் முஷ்டாக் அலி கிரிக்கெட்டில் பிரித்வி ஷா 9 ஆட்டங்களில் ஆடி வெறும் 197 ரன் மட்டுமே எடுத்தார். அத்துடன் அவருக்கு உடல்தகுதி பிரச்சினையும் இருக்கிறது. இதன் காரணமாக அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் ரஞ்சி தொடரின் போது உடல்தகுதி மற்றும் ஒழுங்கீன செயலால் அவர் அணியில் இருந்து பாதியில் கழற்றிவிடப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மும்பை அணியில் இடம் பெறாததை அடுத்து பிரித்வி ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு பதிவில் தெரிவித்திருப்பதாவது,

சொல்லு கடவுளே....நான் இன்னும் என்ன செய்ய வேண்டும். 65 இன்னிங்சில் 3,399 ரன்கள் (உள்நாட்டு ஒரு நாள் போட்டிகளில்) சராசரி 55.7 மற்றும் ஸ்டிரைக் ரேட் 126 வைத்துள்ளேன். ஆனாலும் நான் நல்ல ஆட்டக்காரன் இல்லையா? நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். மக்கள் இன்னும் என்னை நம்புகிறார்கள். நிச்சயமாக நான் திரும்பி வருவேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்