< Back
கிரிக்கெட்
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

Image Courtesy: AFP

கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடர்; இலங்கை அணி அறிவிப்பு

தினத்தந்தி
|
18 Oct 2024 4:47 PM IST

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வனிந்து ஹசரங்கா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணி விவரம்; சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.


மேலும் செய்திகள்