வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இங்கிலாந்து அணியிலிருந்து பட்லர் விலகல்
|வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து பட்லர் விலகியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் வரும் 31-ம் தேதி ஆரம்பமாக உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரின் ஒருநாள் போட்டிகளுக்கான இங்கிலாந்து அணியிலிருந்து வழக்கமான கேப்டன் ஜோஸ் பட்லர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக லிவிங்ஸ்டன் நியமிக்கப்பட்டுள்ளார். பட்லர் டி20 தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளார்.
இந்த தொடர்களுக்கான இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-
ஜோஸ் பட்லர் (டி20 தொடருக்கு மட்டும்), ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தெல், ஜாபர் சோகன், சாம் கர்ரண், வில் ஜாக்ஸ், லிவிங்ஸ்டன், சாகிப் மக்மூத், டான் மவுஸ்லி, ஜேமி ஓவர்டான், அடில் ரஷீத், பில் சால்ட், ரீஸ் டாப்லி மற்றும் ஜான் டர்னர்.