நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்; இலங்கை அணி அறிவிப்பு
|இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி வரும் 9ம் தேதி நடைபெறுகிறது.
3 டி20 போட்டிகள் முறையே தம்புல்லாவிலும், 2 ஒருநாள் போட்டிகள் முறையே பல்லகலேவிலும் நடைபெறுகிறது. இதையடுத்து நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது, இலங்கையின் ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை டி20 அணி விவரம்; சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, காமிந்து மெண்டிஸ், தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்ணாண்டோ, பானுகா ராஜபக்சே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, துனித் வெல்லாலகே, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, நுவான் துஷாரா, மதீஷா பதிரனா, பினுரா பெர்ணாண்டோ. அசிதா பெர்ணாண்டோ.
இலங்கை ஒருநாள் அணி விவரம்; சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, காமிந்து மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷாந் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.