கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

image courtesy; AFP

கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி; விளையாடும் வீரர்களை அறிவித்த பாகிஸ்தான்

தினத்தந்தி
|
3 Nov 2024 1:23 PM IST

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாளை மெல்போர்னில் நடைபெற உள்ளது.

மெல்போர்ன்,

முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனைத்தொடர்ந்து டி20 போட்டிகளும் நடைபெற உள்ளன.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி மெல்போர்னில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் நாளை நடைபெறும் முதல் ஒருநாள் போட்டிக்கான விளையாடும் வீரர்களை (ஆடும் லெவன்) பாகிஸ்தான் அணி அறிவித்துள்ளது.

இந்த அணிக்கு சல்மான் அலி ஆஹா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், பாபர் அசாம், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணி விவரம்; அப்துல்லா ஷபீக், சைம் அயூப், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சல்மான் அலி ஆஹா (துணை கேப்டன்), முகமது இர்பான் கான், ஷாகின் ஷா அப்ரிடி, நசீம் ஷா, ஹாரிஸ் ராப், முகமது ஹஸ்னைன்.


மேலும் செய்திகள்