< Back
கிரிக்கெட்
மிட்செல் மார்ஷ் குறித்து எந்த கவலையும் இல்லை - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

மிட்செல் மார்ஷ் குறித்து எந்த கவலையும் இல்லை - ஆஸ்திரேலிய பயிற்சியாளர்

தினத்தந்தி
|
31 Dec 2024 4:44 PM IST

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. இதில் 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான கடைசி போட்டி ஜனவரி 3ம் தேதி சிட்னியில் தொடங்குகிறது. இந்நிலையில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் மார்ஷ் 3 ஓவர்கள் மட்டுமே பந்துவீசிய நிலையில் அதன்பின் அவர் பந்துவீசவில்லை. இதற்கான காரணமும் தெரிவிக்கப்படாமல் மாறாக டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஸ்சேன் உள்ளிட்டோர் பந்துவீசினர்.

இதனால் மிட்செல் மார்ஷ் காயத்தை சந்தித்திருக்க கூடும் என்றும், சிட்னி டெஸ்டில் விளையாடுவது சந்தேகம் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மிட்செல் மார்ஷ் குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணி பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் கூறியதாவது,

அவருக்கு காயம் ஏதும் இல்லை என்பதால், அதுகுறித்து எந்த கவலையும் இல்லை. மக்கள் அதைப் பற்றி அதிகமாக யோசித்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் அடிக்கடி அவர் பந்துவீச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மேலும் அவரது வேகம் அதிகபட்சமாக 120 கி.மீ. வேகத்தில் உள்ளது. அதனால் நிச்சயம் காயம் குறித்து எந்த கவலையும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்