< Back
கிரிக்கெட்
விராட், ரெய்னா இல்லை.. அந்த இந்திய வீரர்தான் உலகின் சிறந்த பீல்டர் - ஜான்டி ரோட்ஸ் பாராட்டு

image courtesy: AFP

கிரிக்கெட்

விராட், ரெய்னா இல்லை.. அந்த இந்திய வீரர்தான் உலகின் சிறந்த பீல்டர் - ஜான்டி ரோட்ஸ் பாராட்டு

தினத்தந்தி
|
1 Sept 2024 6:37 AM IST

அணி வெற்றி பெற பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவது அவசியம்.

கேப்டவுன்,

கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சு எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு பீல்டிங்கில் சிறப்பாக செயல்படுவதும் முக்கியம். சில போட்டிகளில் வெற்றிக்கு கேட்சுகள் முக்கிய காரணமாக அமையும். உதாரணமாக டி20 உலகக்கோப்பையில் சூர்யகுமார் யாதவ் பிடித்த கேட்ச் இந்தியாவை சாம்பியனாக மாற்றியது.

மேலும் பவுலர்களால் விக்கெட் கைப்பற்ற முடியாத சூழலில் சில ரன் அவுட்டுகள் போட்டியை மாற்றியதும் உண்டு. அதனால் அணி வெற்றி பெற பேட்டிங், பந்துவீச்சு மட்டுமின்றி பீல்டிங்கிலும் சிறப்பாக செயல்படுவது அவசியம்.

அந்த வகையில் யுவராஜ் சிங், முகமது கைப், சுரேஷ் ரெய்னா ஆகியோர் இந்தியாவின் சிறந்த பீல்டர்களாக செயல்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து தற்சமயத்தில் விராட் கோலி தன்னுடைய அற்புதமான பிட்னசை பயன்படுத்தி இந்தியாவின் சிறந்த பீல்டராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி, சுரேஷ் ரெய்னா போன்றவர்களை விட ரவீந்திர ஜடேஜா நவீன கிரிக்கெட்டில் உலக அளவில் சிறந்த பீல்டராக செயல்படுவதாக தென் ஆப்பிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் பாராட்டியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு:- "சுரேஷ் ரெய்னா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் பீல்டர்களாக நான் எப்போதும் ரசித்த 2 வீரர்கள். அவர்கள் இந்தியாவின் சிறந்த 2 பீல்டர்கள். ஆனால் நவீன கிரிக்கெட்டின் சிறந்த பீல்டர் பற்றி பேசும்போது அது கண்டிப்பாக ரவீந்திர ஜடேஜாவாக இருப்பார். அவரை நாம் சர் ஜடேஜா என்று அழைக்கிறோம். அவரை நீங்கள் எங்கே வேண்டுமானாலும் பீல்டிங் செய்ய நிறுத்தலாம்.

அவரை நீங்கள் மிட் விக்கெட், லாங் ஆன் அல்லது ஷார்ட் கவர் போன்ற எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம். அதனாலேயே அவரை நான் சிறந்த பீல்டராக கருதுகிறேன். வேகமாக ஓடக்கூடிய அவரிடம் பந்து சென்றாலே பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பயப்படுவார்கள். எனவே கேட்ச் பிடிக்கிறீர்கள் அல்லது வேகமாக எரிகிறீர்கள் என்பதை தாண்டி நீங்கள் பந்தை எவ்வளவு சீக்கிரமாக நெருங்கி பிடிக்கிறீர்கள் என்பது முக்கியம். அந்த விஷயங்களில்தான் ரவீந்திர ஜடேஜா சிறந்தவர்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்