< Back
கிரிக்கெட்
விராட், ரோகித்தின் இடத்தை யாராலும் எடுக்க முடியாது - இந்திய முன்னாள் கேப்டன்

Image Courtacy: ICCTwitter

கிரிக்கெட்

விராட், ரோகித்தின் இடத்தை யாராலும் எடுக்க முடியாது - இந்திய முன்னாள் கேப்டன்

தினத்தந்தி
|
17 July 2024 1:30 PM GMT

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற்றுவிட்டனர்.

புதுடெல்லி,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் அறிவித்தனர்.

அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர்கள் தொடர்ந்து விளையாடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர். டி20 கிரிக்கெட்டில் இருந்து விராட் மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் ஓய்வு இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது.

இந்நிலையில் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனியை போல விராட் கோலி, ரோகித் சர்மாவின் இடத்தையும் இந்திய அணியில் யாராலும் எடுக்க முடியாது என இந்திய முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது,

இந்திய அணியில் எந்த வகையான கிரிக்கெட்டிலும் விராட் மற்றும் ரோகித் ஆகியோரின் இடத்தை யாராலும் எடுத்துக் கொள்ள முடியாது. அவர்கள் இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய சேவகர்களாக இருந்திருக்கிறார்கள். தற்போது அவர்கள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுள்ளனர்.

அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தமக்கென்று தரத்தை உருவாக்கிய விராட் கோலியை இந்தியா கண்டிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிஸ் செய்யும். அந்த இருவருமே சச்சின், தோனியை போன்றவர்கள். அந்த இருவரின் இடத்தை யாரையும் வைத்து மாற்ற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்