< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக வாய்ப்பு.. காரணம் இதுதான் - மோர்னே மோர்கல்
கிரிக்கெட்

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் நிதிஷ் ரெட்டி அறிமுகமாக வாய்ப்பு.. காரணம் இதுதான் - மோர்னே மோர்கல்

தினத்தந்தி
|
21 Nov 2024 11:47 AM IST

ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர் நாளை ஆரம்பமாகிறது.

பெர்த்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய வீரர்கள் பெர்த்தில் உள்ள வாகா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே முதலாவது போட்டி நடைபெறும் பெர்த் ஆடுகளம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று அதன் பராமரிப்பாளர் சமீபத்தில் எச்சரித்திருந்தார். மேலும் பயிற்சியின் போதும் இந்திய வீரர்கள் வேகப்பந்து வீச்சில் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இந்த முதல் போட்டியில் இளம் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான நிதிஷ் ரெட்டி இந்திய அணியில் அறிமுகம் ஆக உள்ளதாக தகவல் வெளியாகியது. அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆழத்தை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கல் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

அதில், " நிதிஷ் ரெட்டியை பற்றி பேசியாக வேண்டும். அவரிடம் நல்ல ஆல் ரவுண்டர் திறமை உள்ளது. அவரது பந்துவீச்சு இந்த போட்டியில் முதல் 2 நாட்களுக்கு அணிக்கு பெரிதும் உதவும். ஸ்டம்புக்கு நேராக பந்து வீசும் திறன் கொண்டவர். உலகில் உள்ள அனைத்து அணிகளும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உதவும் இத்தகைய ஆல் ரவுண்டர்களை விரும்பும். இந்த போட்டியில் பும்ரா அவரை எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பார்க்க ஆவலாக உள்ளது. நிச்சயம் இந்த தொடரில் அவர் கவனிக்கக்கூடிய வீரராக இருப்பார்" என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்