< Back
கிரிக்கெட்
நிசாங்கா, வெல்லலகே அரைசதம்... இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை
கிரிக்கெட்

நிசாங்கா, வெல்லலகே அரைசதம்... இந்தியாவுக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

தினத்தந்தி
|
2 Aug 2024 6:12 PM IST

இலங்கை தரப்பில் அதிகபட்சமாக வெல்லலகே 67 ரன்கள் அடித்தார்.

கொழும்பு,

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் அசலன்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசாங்கா - அவிஷ்கா பெர்னண்டோ ஆகியோர் களமிறங்கினர். இதில் பெர்னண்டோ 1 ரன்னில் வந்த வேகத்திலேயே சிராஜ் பந்துவீச்சில் நடையை கட்டினார். அவரை தொடர்ந்து குசல் மெண்டிஸ் 14 ரன்களிலும், சதீரா சமரவிக்ரமா 8 ரன்களிலும், அசலன்கா 14 ரன்களிலும், லியானகே 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் பதும் நிசாங்கா பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த நிலையில் 56 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் வனிந்து துனித் வெல்லலகே பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ஹசரங்கா 24 ரன்களிலும், தனஞ்சயா 17 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 67 ரன்கள் அடித்த வெல்லலகே கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இலங்கை 8 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக வெல்லலகே 67 ரன்களும், நிசாங்கா 56 ரன்களும் அடித்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 231 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது.

மேலும் செய்திகள்