நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டன் நியமனம் - யார் தெரியுமா...?
|நியூசிலாந்து அணிக்கு புதிய கேப்டனை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வெல்லிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதையடுத்து நியூசிலாந்து அணி இலங்கைக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் நியூசிலாந்தில் நடைபெறுகிறது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகளும் அதனை தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடைபெறுகின்றன. இந்த தொடர் வரும் 28ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், நியூசிலாந்து வெள்ளைப்பந்து கிரிக்கெட் அணிக்கு (ஒருநாள் மற்றும் டி20) புதிய கேப்டனை நியமித்து அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி நியூசிலாந்தின் முன்னணி வீரரான மிட்செல் சாண்ட்னெரை அந்த அணியின் கேப்டனாக நியமித்து நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து தோல்வி அடைந்ததை அடுத்து அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேன் வில்லியம்சன் அந்த பொறுப்பில் இருந்து விலகினார்.
மிட்செல் சாண்ட்னெர் நியூசிலாந்து அணிக்காக 30 டெஸ்ட், 107 ஒருநாள் மற்றும் 106 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். புதிய கேப்டன் தலைமையில் நியூசிலாந்து அணி எவ்வாறு செயல்பட உள்ளது என்பதை பார்க்கலாம்.