ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்கள்: நியூசிலாந்து அணி அறிவிப்பு
|ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வெலிங்டன்,
நியூசிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதலில் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி செப்டம்பர் 9-ம் தேதி இந்தியாவில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ளது.
இதனையடுத்து நியூசிலாந்து, இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இந்த தொடர் செப்டம்பர் 18-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து அணி விவரம் பின்வருமாறு:-
டிம் சவுதி (கேப்டன்), டாம் ப்ளன்டெல், மைக்கேல் பிரேஸ்வெல், டெவோன் கான்வே, மாட் ஹென்றி, டாம் லதம், டேரில் மிட்செல், வில் ஓ ரூர்க், அஜாஸ் படேல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சான்ட்னர், பென் சியர்ஸ், கேன் வில்லியம்சன், வில் யங்.