< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறும் நியூசிலாந்து முன்னணி வீரர்

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெறும் நியூசிலாந்து முன்னணி வீரர்

தினத்தந்தி
|
15 Nov 2024 8:35 AM IST

டிம் சவுதி நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 385 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

வெல்லிங்டன்,

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டிம் சவுதி (வயது 35). இவர் நியூசிலாந்து அணிக்காக கடந்த 2008ம் ஆண்டு அறிமுகம் ஆனார். இவர் நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 125 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும், இவர் 54 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார்.

நியூசிலாந்து கிரிக்கெட்டின் முன்னணி வீரராக இருக்கும் டிம் சவுதி, இந்த மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இரு ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் நியூசிலாந்து அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 385 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரும் 28ம் தேதி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் ஆட்டங்கள் கிறிஸ்ட்சர்ச், வெல்லிங்டன் மற்றும் ஹாமில்டனில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்