< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் ரத்து.. காரணம் என்ன..?

தினத்தந்தி
|
9 Sept 2024 5:40 PM IST

நியூசிலாந்து - ஆப்கானிஸ்தான் இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று தொடங்க இருந்தது.

கிரேட்டர் நொய்டா,

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவின் கிரேட்டர் நொய்டாவில் இன்று தொடங்க இருந்தது. ஆனால் கிரெட்டர் நொய்டாவில் கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மைதானத்தின் சில பகுதிகள் ஈரமாக இருந்தது.

பலமுறை சோதனை செய்தும் போட்டியை இன்று தொடங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் டாஸ் கூடபோடப்படாமல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி நாளை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்