< Back
கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளிய லயன்
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: அஸ்வினை பின்னுக்கு தள்ளிய லயன்

தினத்தந்தி
|
31 Dec 2024 10:34 AM IST

இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்டில் லயன் மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

மெல்போர்ன்,

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் கடந்த 26-ந்தேதி தொடங்கியது. 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படும் இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் முறையே ஆஸ்திரேலியா 474 ரன்களும், இந்தியா 369 ரன்களும் எடுத்தன. 105 ரன் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா 234 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

இதன் மூலம் இந்தியாவுக்கு 340 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 79.1 ஓவர்களில் 155 ரன்களில் சுருண்டது. இதனால் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தன. 3-வது டெஸ்ட் மழையால் டிராவானது.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் இரு இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

இந்த 5 விக்கெட்டுகளையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் கைப்பற்றிய விக்கெட்டுகளின் எண்ணிக்கை மொத்தம் 538 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர்களின் 7-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அஸ்வினை (537 விக்கெட்) பின்னுக்கு தள்ளியுள்ளார்.

அந்த பட்டியல்:-

1. முத்தையா முரளிதரன் - 800 விக்கெட்டுகள்

2. ஷேன் வார்னே - 708 விக்கெட்டுகள்

3. ஜேம்ஸ் ஆண்டர்சன் - 704 விக்கெட்டுகள்

4. அனில் கும்ப்ளே - 619 விக்கெட்டுகள்

5. ஸ்டூவர்ட் பிராட் - 604 விக்கெட்டுகள்

6. கிளென் மெக்ராத் - 563 விக்கெட்டுகள்

7. நாதன் லயன் - 538 விக்கெட்டுகள்

8. அஸ்வின் - 537 விக்கெட்டுகள்

9. கர்ட்னி வால்ஷ் - 519 விக்கெட்டுகள்

மேலும் செய்திகள்