ஒரு ஐ.பி.எல். சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள்; வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா கம்மின்ஸ்..?
|ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.
சென்னை,
10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெறுகிறது. சென்னையில் நடைபெறும் இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன.
இந்நிலையில் இந்த போட்டில் ஐதராபாத் கேப்டன் கம்மின்ஸ் 3 விக்கெட் எடுத்தால் புதிய சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு உள்ளது. அதாவது ஒரு ஐ.பி.எல் சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் தற்போது ஷேன் வார்னே 19 விக்கெட்டுகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.
அதற்கு அடுத்த இடங்களில் அனில் கும்ப்ளே 17 விக்கெட்டுகள், பேட் கம்மின்ஸ் 17 விக்கெட்டுகள் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் இறுதி போட்டியில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட் எடுத்தால் ஒரு ஐ.பி.எல் சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஷேன் வார்னேவை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைக்க வாய்ப்பு உள்ளது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் கம்மின்ஸ் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி ஒரு ஐ.பி.எல் சீசனில் கேப்டனாக அதிக விக்கெட்டுகள் எடுத்த வார்னேவின் சாதனையை முறியடிப்பாரா என்பதை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.