ரஞ்சி டிராபி தொடரில் களம் காணும் முகமது ஷமி - வெளியான தகவல்
|நாளை தொடங்க உள்ள மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் முகமது ஷமி களம் காண உள்ளார்.
கொல்கத்தா,
கடந்த ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயமடைந்தார். அந்த தொடரில் இந்திய அணிக்காக மொத்தம் 24 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியிருந்தார். அந்த தொடரில் முகமது ஷமி காயம் அடைந்ததார். அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்ட அவர் எந்த வித கிரிக்கெட்டும் ஆடாமல் ஓய்வில் இருந்தார்.
எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முகமது ஷமி இடம் பிடிப்பார் என தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் முகமது ஷமி காயம் குணமடையாததால் அவரால் இடம் பெற முடியவில்லை. இந்நிலையில், ரஞ்சி டிராபி தொடரில் நாளை தொடங்க உள்ள மத்திய பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் பெங்கால் அணியில் முகமது ஷமி களம் காண உள்ளார்.
நாளை தொடங்க உள்ள ஆட்டத்தில் முகமது ஷமி ஆட உள்ளதாக பெங்கால் அணி பயிற்சியாளர் லக்ஷ்மி ரத்தன் சுக்லா உறுதி செய்துள்ளார். இதற்கான தகுதி சான்றிதழையும் தேசிய கிரிக்கெட் அகாடமி வழங்கியுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.