< Back
கிரிக்கெட்
மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு
கிரிக்கெட்

மெல்போர்ன் டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
26 Dec 2024 4:39 AM IST

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போனில் தொடங்கியுள்ளது.

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதுவரை நடந்துள்ள 3 டெஸ்ட் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மீண்டும் ஆடும் லெவனில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில் கழற்றிவிடப்பட்டுள்ளார். ரோகித் சர்மா தொடக்க ஆட்டக்காரராக மீண்டும் களமிறங்க உள்ளார். இதனால் கடந்த போட்டிகளில் ஜெய்ஸ்வாலுடன் இணைந்து தொடக்க வீரராக களமிறங்கிய கே.எல். ராகுல் மிடில் ஆர்டரில் களமிறங்க உள்ளார்.

மேலும் செய்திகள்