இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் - ஆஸ்திரேலிய வீரர் ஓபன் டாக்
|இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என ஆஸ்திரேலிய இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார் .
பெர்த்,
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பையான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட், தொடரில் விளையாடுகிறது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள காத்திருக்கிறேன் என ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி தெரிவித்துள்ளார் .இது தொடர்பாக அவர் கூறியதாவது ,
"பெர்த் நகரில் நடைபெறும் முதல் போட்டிக்கு நான் செல்லும் போது சில திட்டங்களுடன் செல்வேன். இந்திய பந்துவீச்சாளர்கள், எப்படி பந்து வீசுவார்கள் என்பதை அறிந்து கொள்ள நான் சில வீடியோக்களையும் பார்த்துள்ளேன். அவர்களை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதை கற்பனை செய்து பார்க்க முயற்சிக்கிறேன். சரியான திட்டமிடலுடன் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரையும் எதிர்கொள்ள நான் ஆவலுடன் காத்திருக்கிறேன் . என தெரிவித்துள்ளார் .
ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் ஒய்வு பெற்றுள்ள நிலையில் அவருக்கு பதிலாக தொடக்க வீரராக நாதன் மெக்ஸ்வீனி சேர்க்கப்பட்டுள்ளார்.