< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் - பாகிஸ்தான் புதிய கேப்டன் சூளுரை
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் - பாகிஸ்தான் புதிய கேப்டன் சூளுரை

தினத்தந்தி
|
29 Oct 2024 3:15 PM IST

பாகிஸ்தான் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் புதிய கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

லாகூர்,

பாகிஸ்தான் அணி நவம்பர் 4-ந் தேதி முதல் ஆஸ்திரேலியாவிலும், 24-ந் தேதியில் இருந்து ஜிம்பாப்வேயிலும் சுற்றுப்பயணம் செய்து தலா 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இந்த தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. பாபர் அசாம் விலகியதை அடுத்து புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவோம் என்று முகமது ரிஸ்வான் சூளுரைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "ஆஸ்திரேலிய மண்ணில் நாங்கள் கடும் சிரமங்களை சந்தித்தோம் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. கடந்த சுற்றுப்பயணங்களில் நாங்கள் அங்கே சரியாக விளையாடவில்லை. அதேசமயம் நாங்களும் ஆஸ்திரேலியாவுக்கு பல சிக்கல்களை கொடுத்திருக்கின்றோம். இம்முறை நாங்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு எங்கள் நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம்.

நாங்கள் கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு டெஸ்ட் தொடரில் விளையாட சென்றோம். அப்போது அனைத்து போட்டிகளிலும் நாங்கள் வெற்றியின் அருகே வந்து தோல்வியை தழுவினோம். எங்கள் அணியில் சில குறைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் சரி செய்து இருக்கின்றோம். இதனால் நிச்சயம் நாங்கள் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்