< Back
கிரிக்கெட்
கடைசி டெஸ்ட்: தொடரை சமன் செய்யுமா இந்தியா..? ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்

image courtesy:PTI

கிரிக்கெட்

கடைசி டெஸ்ட்: தொடரை சமன் செய்யுமா இந்தியா..? ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்

தினத்தந்தி
|
2 Jan 2025 6:25 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா 1-2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது.

சிட்னி,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பாரடர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இந்தியாவும், 2-வது டெஸ்டில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. தொடர்ந்து 3-வது டெஸ்ட் மழையால் 'டிரா' ஆனது. மெல்போர்னில் நடந்த 4-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா 184 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இந்திய நேரப்படி நாளை (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா இந்தியா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்து பார்டர் - கவாஸ்கர் கோப்பையை தக்க வைக்க முடியும் (கடந்த பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது) . அத்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பிலும் நீடிக்கலாம்.

மறுமுனையில் பார்டர் - கவாஸ்கர் கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி எல்லா வகையிலும் முயற்சி செய்யும். மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற கடந்த 2 பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடர்களில் அடைந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் தீவிர முனைப்புடன் விளையாடும் என்பதால் இந்த டெஸ்ட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்