< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்- இந்திய அணியில் இணைந்த ஹர்ஷித் ராணா
|29 Oct 2024 7:03 PM IST
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி 1-ந் தேதி தொடங்குகிறது.
மும்பை ,
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா இணைந்துள்ளார்.ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்ஷித் ராணா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார்.