லங்கா பிரீமியர் லீக் : கண்டி பால்கன்சுக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ்
|கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியில் அதிகபட்சமாக கிளென் பிலிப்ஸ் 70 ரன்கள் குவித்தார்.
தம்புல்லா,
லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் முதலாவது ஆட்டத்தில் ஹசரங்கா தலைமையிலான கண்டி பால்கன்ஸ் அணியும், திசாரா பெராரே தலைமையிலான கொலம்போ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹசரங்கா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொலம்போ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் ஏஞ்சலோ பெராரே ஆகியோர் களமிறங்கினர். இருவரும் இணைந்து அணிக்கு ஒரளவு சிறப்பான தொடக்கம் கொடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் இவர் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஷதாப் கானும் அதிரடியாக விளையாடி கொலம்போ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் குவித்துள்ளது. கண்டி அணி தரப்பில் அதிகபட்சமாக சமீரா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி கண்டி பால்கன்ஸ் களமிறங்க உள்ளது.