< Back
கிரிக்கெட்
கோலி உள்ளே..ரோகித் வெளியே...- டி வில்லியர்ஸ் தேர்வு செய்த கனவு டி20 அணி - ரிசர்வ் வீரராக தோனி

கோப்புப்படம்

கிரிக்கெட்

கோலி உள்ளே..ரோகித் வெளியே...- டி வில்லியர்ஸ் தேர்வு செய்த கனவு டி20 அணி - ரிசர்வ் வீரராக தோனி

தினத்தந்தி
|
16 Nov 2024 7:07 AM IST

தன்னுடைய கனவு அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக சுனில் நரைன் மற்றும் ரஷித் கான் இருவரையும் டி வில்லியர்ஸ் தேர்வு செய்துள்ளார்.

கேப்டவுன்,

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் டி வில்லியர்ஸ். இவர் தென் ஆப்பிரிக்க அணிக்காக 114 டெஸ்ட், 228 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் இவர் 184 ஐ.பி.எல் போட்டிகளிலும் ஆடி உள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்காக அறிமுகம் ஆன டிவில்லியர்ஸ், 2018ம் ஆண்டு ஓய்வு முடிவை அறிவித்தார்.

நவீன டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் மிகப்பெரிய புதுமைகளை கொண்டு வந்த டி வில்லியர்ஸ் தன்னுடைய கனவு டி20 அணியை அறிவித்திருக்கிறார். இந்த கனவு டி20 அணியில் விராட் கோலி இடம் பெற்று இருக்கிறார். மேலும் விக்கட் கீப்பராக ஹென்றிச் கிளாசென் அணியில் இருந்த போதும், அவர் ரிஷப் பண்டை தேர்வு செய்துள்ளார்.

மேலும், இந்த அணியில் இந்தியாவுக்காக டி20 உலகக்கோப்பையை வென்றுகொடுத்த ரோகித்துக்கு இடம் அளிக்கப்படவில்லை. இந்திய முன்னாள் கேப்டன் தோனி ரிசர்வ் வீரராக இடம் பிடித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் மற்றும் ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தன்னுடைய அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக சுனில் நரைன் மற்றும் ரஷீத் கான் இருவரையும் சேர்த்துள்ளார். அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக மூன்று சர்வதேச போட்டிகள் மட்டுமே விளையாடிய மயங்க் யாதவை தன்னுடைய கனவு அணியில் ரிசர்வ் வீரராக சேர்த்துள்ளார்.

டி வில்லியர்ஸ் தேர்வு செய்த கனவு டி20 அணி விவரம்;

விராட் கோலி, டிராவிஸ் ஹெட், கேமரூன் க்ரீன், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹென்றிச் கிளாசென், டேவிட் மில்லர், ரஷித் கான், சுனில் நரேன், புவனேஷ்வர் குமார், காகிசோ ரபாடா, ஜஸ்ப்ரீத் பும்ரா.

ரிசர்வ் வீரர்கள்; எம்.எஸ்.தோனி, யுஸ்வேந்திர சாஹல், மயங்க் யாதவ்.

மேலும் செய்திகள்