< Back
கிரிக்கெட்
ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

Image Courtesy: @BCCIWomen

கிரிக்கெட்

ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை: வங்காளதேசத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா

தினத்தந்தி
|
22 Dec 2024 12:43 PM IST

இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட், பருனிகா சிசோடியா, சோனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

கோலாலம்பூர்,

முதலாவது மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்தது. இந்த தொடரின் லீக் சுற்று மற்றும் அரையிறுதி ஆட்டங்களின் முடிவில் இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இந்த தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.

இந்நிலையில், இந்தியா-வங்காளதேசம் இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 117 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக திரிஷா 52 ரன் எடுத்தார். வங்காளதேசம் தரப்பில் பர்ஜானா ஈஸ்மின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

தொடர்ந்து 118 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேசம் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 76 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

வங்காளதேசம் தரப்பில் ஜூயைரியா பெர்டொஸ் 22 ரன் எடுத்தார். இந்தியா தரப்பில் ஆயுஷி சுக்லா 3 விக்கெட், பருனிகா சிசோடியா, சோனம் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் முதலாவது ஜூனியர் மகளிர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் செய்திகள்