பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர்; 26-ந்தேதி தொடக்கம்
|பள்ளிகளுக்கு இடையேயான ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் 26-ந்தேதி தொடங்க உள்ளது.
சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது, இந்த ஆண்டு ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் 26-ந்தேதி தொடங்க உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் சங்க துணை செயலாளர் பாபா கூறுகையில், "ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் முதன்முதலில் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன்படி 12-வது ஜூனியர் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் தொடர் வரும் 26-ந்தேதி தொடங்க உள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு இடையே மட்டும் இந்த போட்டி நடத்தப்பட்டு வந்தது. இந்த முறை கோவா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களை சேர்ந்த பள்ளிகளும் போட்டியில் பங்கேற்க உள்ளன. எதிர்காலத்தில் இந்த தொடரை தேசிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற திட்டம் உள்ளது" என்று தெரிவித்தார்.