< Back
கிரிக்கெட்
ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

image courtesy: twitter/@ACCMedia1

கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
30 Nov 2024 10:22 AM IST

ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் இன்று விளையாடுகிறது.

துபாய்,

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள 8 முறை சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பாகிஸ்துடன் மோதுகிறது.

துபாயில் நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பந்துவீச உள்ளது.

மேலும் செய்திகள்