< Back
கிரிக்கெட்
ஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

Image Courtesy: @ACCMedia1

கிரிக்கெட்

ஜூனியர் ஆசிய கோப்பை: ஜப்பானை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற இந்தியா

தினத்தந்தி
|
2 Dec 2024 10:59 PM IST

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.

ஷார்ஜா,

8 அணிகள் இடையிலான 11-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜப்பான் அணியுடன் இன்று மோதியது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜப்பான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக முகமது அமான் 122 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 340 என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய ஜப்பான் அணியினர், இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 50 ஓவர்கள் வரை முழுமையாக பேட்டிங் செய்த ஜப்பான் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக இந்தியா 211 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாக சேத்தன் சர்மா, ஹார்டிக் ராஜ், கார்த்திகேயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வரும் 4ம் தேதி யு.ஏ.இ அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். இந்திய அணி தோல்வி கண்டால் யு.ஏ.இ அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

மேலும் செய்திகள்