< Back
கிரிக்கெட்
ஜெய்ஸ்வால் 40-க்கும் மேற்பட்ட டெஸ்ட் சதங்கள் அடிப்பார் - ஆஸ்திரேலிய வீரர்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் 40-க்கும் மேற்பட்ட டெஸ்ட் சதங்கள் அடிப்பார் - ஆஸ்திரேலிய வீரர்

தினத்தந்தி
|
27 Nov 2024 5:48 PM IST

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.

மெல்போர்ன்,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது போட்டி டிசம்பர் 6ம் தேதி தொடங்குகிறது.

முதல் போட்டியில் இந்தியாவின் 2வது இன்னிங்சில் பேட்டிங்கில் அபாரமாக ஆடிய ஜெய்ஸ்வால் 161 ரன்னும், கோலி 100 ரன்னும் அடித்து அசத்தினர். இதன் காரணமாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடிய தனது முதல் போட்டியிலேயே அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த இந்திய வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்தார்.

இந்நிலையில், அனைத்து சூழ்நிலைக்கும் தம்மை உட்படுத்திக் கொள்ளும் திறமை ஜெய்ஸ்வாலிடம் இருப்பதாகவும், கெரியர் முடிவதற்குள் குறைந்தது 40 டெஸ்ட் சதங்களுக்கு மேல் அடிப்பார் எனவும் கிளென் மேக்ஸ்வெல் அவரை பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

கெரியர் முடிவதற்குள் ஜெய்ஸ்வால் 40-க்கும் மேற்பட்ட டெஸ்ட் சதங்கள் அடித்து வித்தியாசமான சாதனைகளை எழுதக்கூடிய வீரராக இருப்பார். அவரிடம் வித்தியாசமான சூழ்நிலைகளுக்கு உட்படுத்திக்கொள்ளும் சிறப்பான திறமை இருக்கிறது. அதனால் அடுத்த சில போட்டிகளில் அவரை நிறுத்த முடியாவிட்டால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய பின்னடைவு ஏற்படும்.

அவர் நிறைய ஷாட்டுகளை அடிப்பது சிறப்பானதாகும். அவருடைய கால் நகர்வு துல்லியமாக இருக்கிறது. அவருடைய பேட்டிங்கில் பெரிய வீக்னஸ் இருப்பதாக தெரியவில்லை. ஷார்ட் பந்துகளை நன்றாக எதிர்கொள்ளும் அவர் டிரைவ் அடித்து சுழற்பந்து வீச்சாளர்களை நம்ப முடியாத வகையில் எதிர்கொள்கிறார். நீண்ட நேரம் அழுத்தத்தை உள்வாங்கியும் விளையாடுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்