< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல். மெகா ஏலம் எப்போது ? வெளியான தகவல்
கிரிக்கெட்

ஐ.பி.எல். மெகா ஏலம் எப்போது ? வெளியான தகவல்

தினத்தந்தி
|
5 Nov 2024 7:39 AM IST

ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது.

மும்பை,

ஐ.பி.எல். 18-வது சீசன் அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இந்த சூழ்நிலையில் ஒவ்வொரு அணியின் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்க வைத்துள்ளது. பஞ்சாப் 2, பெங்களூரு 3, டெல்லி 4, ராஜஸ்தான் ராயல்ஸ் 6 வீரர்களை தக்க வைத்துள்ளது.

ஆச்சரியம் அளிக்கும் வகையில் ரிஷப் பண்ட் (டெல்லி), லோகேஷ் ராகுல் (லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (கொல்கத்தா), அர்ஷ்தீப்சிங் (பஞ்சாப்) போன்ற முன்னணி வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

இந்த நிலையில் ஐ.பி.எல். வீரர்கள் மெகா ஏலம் சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் இந்த மாத இறுதியில் நடக்க உள்ளது. இந்த தகவல் அனைத்து அணி நிர்வாகிகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வருகிற 24 மற்றும் 25-ந்தேதிகளில் மெகா ஏலம் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்துள்ளார்

மேலும் செய்திகள்