< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம்  - அர்ஷ்தீப் சிங்

கோப்புப்படம்

கிரிக்கெட்

ஐ.பி.எல்.; தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பதுதான் எனது எண்ணம் - அர்ஷ்தீப் சிங்

தினத்தந்தி
|
16 Dec 2024 4:01 PM IST

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது.

புதுடெல்லி,

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் 14-ந் தேதி முதல் மே 25-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடரில் தோனி அன் கேப்டு வீரராக களம் இறங்க உள்ளார். தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த ஐ.பி.எல் சீசனுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட தோனி அடுத்த சீசனில் விளையாட உள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கும் வேளையில் அவர் குறித்த செய்திகள் நாள்தோறும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் தோனிக்கு எதிராக பந்து வீசும் போது எந்த ஒரு திட்டத்தையும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றும், அவர் களம் இறங்கினால் தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது என்பது தான் என் எண்ணமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

தோனிக்கு எதிராக பந்து வீசும் போது நான் எந்த ஒரு திட்டத்தையும் வைத்துக் கொள்ள மாட்டேன். என் மனதில் ஓடுவதெல்லாம் ஒரே ஒரு விசயம் தான் தோனி என் பந்தை எதிர்கொள்ளக்கூடாது. ஏனெனில் அவருக்கு எதிராக பந்துவீசும் போது அவர் சிக்ஸ் அடிக்கவோ, பவுண்டரி அடிக்கவோ நினைத்தால் நிச்சயம் அடித்து விடுவார். எனவே அவர் என்னுடைய பந்து எதிர்கொள்ளக்கூடாது என்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்