< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்

ஐ.பி.எல். மெகா ஏலம்: 13 வயது இளம் வீரரை எடுத்த ராஜஸ்தான் ராயல்ஸ்

தினத்தந்தி
|
25 Nov 2024 3:38 PM IST

ஐ.பி.எல். தொடரின் 2-ம் நாள் மெகா ஏலம் தொடங்கியது.

ஜெட்டா,

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களின் 2 நாள் ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நேற்று தொடங்கியது. 7 மணி நேரம் நடந்த முதல் நாள் ஏலத்தில் 24 வெளிநாட்டவர் உள்பட 72 வீரர்கள் மொத்தம் ரூ.467.95 கோடிக்கு விற்கப்பட்டனர். இதில் 20 வீரர்கள் ரூ.10 கோடிக்கு மேல் விலை போனது வியப்பூட்டியது. ரிஷப் பண்ட் (ரூ.27 கோடி, லக்னோ), ஸ்ரேயாஸ் அய்யர் (ரூ.26¾ கோடி, பஞ்சாப்) ஆகியோர் புதிய உச்சத்தை தொட்டனர்.

இந்நிலையில் 2-வது நாள் மெகா ஏலம் தொடங்கியது. இதில் முதல் வீரராக ரோவ்மன் பவலை கொல்கத்தா அணி ரூ. 1.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இந்திய இளம் வீரரான பிரித்வி ஷாவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

உள்ளூர் வீரரான அன்ஷுல் கம்போஜை ஏலத்தில் எடுக்க சென்னை - மும்பை அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் சென்னை அணி ரூ. 3.40 கோடிக்கு அவரை ஏலத்தில் வாங்கியது.

ஸ்டீவ் சுமித், அல்சாரி ஜோசப், சிக்கந்தர் ராசா, பதும் நிசாங்கா, பிரண்டன் கிங், கஸ் அட்கின்சன், கைல் மேயர்ஸ், சர்பராஸ் கான், நவ்தீப் சைனி, ஜேசன் பெர்ஹண்ட்ராப், மேத்யூ ஷார்ட், போன்ற முன்னணி வீரர்களை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான ஜேமி ஓவர்டனை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடிக்கு வாங்கியுள்ளது.

ஐ.பி.எல். வரலாற்றில் மிக குறைந்த வயதில் ஏலப்பட்டியலில் இடம்பெற்றிருந்த வைபவ் சூர்யவன்ஷியை (வயது 13) ரூ. 1.1 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாங்கியுள்ளது. இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் குறைந்த வயதில் வாங்கப்பட்ட வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

Live Updates

  • 25 Nov 2024 11:09 PM IST

    சவுதி அரேபியாவில் 2 நாட்கள் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலம் நிறைவு பெற்றது. ஏலத்தில் ரூ.639.15 கோடிக்கு 182 வீரர்கள் எடுக்கப்பட்டனர். அதிகப்ட்சமாக ரிஷப் பண்ட் ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஏலம் எடுத்துள்ளது.

  • 25 Nov 2024 10:53 PM IST

    ஐபிஎல் மெகா ஏலம் நிறைவு பெற்றது

  • 25 Nov 2024 10:53 PM IST

    அர்ஜுன் டெண்டுல்கரை ரூ.30 லட்சத்திற்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. லுங்கி நிகிடியை ரூ.1 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. பிரவீன் துபேவை ரூ.20 லட்சதிற்கு பஞ்சாப் அணி எடுத்துள்ளது. 

  • 25 Nov 2024 9:46 PM IST

    கடந்த சீசனில் சென்னை அணியில் இடம்பெற்றிருந்த ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை லக்னோ அணி ரூ. 30 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. மேலும் அர்ஷின் குல்கர்னியையும் (ரூ. 30 லட்சம்) வாங்கியுள்ளது.

  • 25 Nov 2024 9:45 PM IST

    சச்சின் பேபியை ஐதராபாத் அணியும், ஆந்த்ரே சித்தார்த்தை சென்னை அணியும் தலா ரூ. 30 லட்சத்திற்கு எடுத்துள்ளன. 

  • 25 Nov 2024 9:42 PM IST

    முதல் சுற்றில் ஏலம் போகாத மொயீன் அலியை 2-வது வாய்ப்பில் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது. அதேபோல் உம்ரான் மாலிக்கையும் ரூ. 75 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. 

  • 25 Nov 2024 9:39 PM IST

    சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கரை எந்த அணியும் வாங்கவில்லை. 

  • 25 Nov 2024 9:38 PM IST

    வன்ஷ் பேடியை சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 55 லட்சத்திற்கு வாங்கியுள்ளது. 

  • 25 Nov 2024 9:37 PM IST

    முதல் சுற்றில் ஏலம் போகாத அனுகுல் ராயை 2-வது வாய்ப்பில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 40 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.

  • 25 Nov 2024 9:34 PM IST

    டோனோவன் பெரேரா டெல்லி அணியால் ரூ. 75 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்