< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல் : லக்னோ அணியில் இருந்து கே.எல். ராகுல் விடுவிப்பு ?
கிரிக்கெட்

ஐ.பி.எல் : லக்னோ அணியில் இருந்து கே.எல். ராகுல் விடுவிப்பு ?

தினத்தந்தி
|
23 Oct 2024 12:50 PM IST

ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பை,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விவரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3 சீசன்களாக கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில் அவரது ஆட்டம் அணியின் நிர்வாகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்