< Back
கிரிக்கெட்
ஐ.பி.எல்.2025: துருவ் ஜுரெலுக்கு இதை செய்ய உள்ளேன் - சாம்சன் நெகிழ்ச்சி அறிவிப்பு

image courtesy: ANI

கிரிக்கெட்

ஐ.பி.எல்.2025: துருவ் ஜுரெலுக்கு இதை செய்ய உள்ளேன் - சாம்சன் நெகிழ்ச்சி அறிவிப்பு

தினத்தந்தி
|
22 Dec 2024 8:47 PM IST

ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் துருவ் ஜுரெல் இடம்பெற்றுள்ளார்.

மும்பை,

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் இளம் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரெல். அந்த தொடரின் 4-வது போட்டியில் இக்கட்டான சூழ்நிலையில் சிறப்பாக பேட்டிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார்.

இவரது ஆட்டத்தை பார்த்து வியந்த சுனில் கவாஸ்கர், அடுத்த எம்.எஸ். தோனி உருவாகி வருவதாக பாராட்டு தெரிவித்தார். தற்போது நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் அணியில் இடம்பிடித்துள்ளார்.

இவர் ஐ.பி.எல். தொடரில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். சாம்சன் விக்கெட் கீப்பராக இருப்பதால துருவ் அணியில் வெறும் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

இந்நிலையில் 2025 ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணியில் தனது விக்கெட் கீப்பிங் இடத்தை துருவ் ஜுரெலுடன் பகிர்ந்து கொள்ள உள்ளதாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் துருவ் ஜுரெலை வருங்கால விக்கெட் கீப்பராக உருவாக்க முயற்சித்து வருகிறது.

அந்த வாய்ப்பைப் பிடிப்பதற்காக 2025 ஐபிஎல் தொடரில் அவருக்கு விக்கெட் கீப்பிங் பொறுப்பை கொடுக்க உள்ளதாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்சன் நெகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து சாம்சன் பேசியது பின்வருமாறு:- "நாங்கள் வீரர்களுக்காகவும் உணர்வோம். துருவ் ஜுரெல் தற்சமயத்தில் டெஸ்ட் விக்கெட் கீப்பராக தனது கெரியரில் இருக்கிறார். அதனால் ஐபிஎல் தொடரிலும் அவர் ஏதோ ஒரு தருணத்தில் விக்கெட் கீப்பிங் செய்ய வேண்டும். அதை நாங்கள் விவாதித்தோம். எனவே நாங்கள் விக்கெட் கீப்பிங்கை பகிர்ந்து கொள்ள உள்ளோம். நானும் ஒரு சாதாரண பீல்டராக அதிகம் கேப்டன்ஷிப் செய்ததில்லை.

எனவே உங்களுடைய நிலைமையை புரிந்து கொண்ட கேப்டன் என்ற முறையில் நீங்கள் சில போட்டிகளில் விக்கெட் கீப்பிங் செய்வதை நான் விரும்புகிறேன் என்று அவரிடம் கூறியுள்ளேன். இந்த முடிவு எப்படி செல்கிறது என்பதை பார்க்க வேண்டும். கண்டிப்பாக அது அணிக்கு பாதிப்பை கொடுக்காது. எப்போதும் எங்களுக்கு அணியே முக்கியம்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்