கிரிக்கெட்
கிரிக்கெட்

ஐ.பி.எல். 2025: குஜராத் அணியில் ஆலோசகராக இணையும் இந்திய முன்னாள் வீரர் - வெளியான தகவல்

தினத்தந்தி
|
22 Oct 2024 6:41 PM IST

குஜராத் அணியின் பேட்டிங் ஆலோசகராக பார்தீவ் படேல் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அகமதாபாத்,

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏலத்துக்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அணியில் தக்கவைத்துக்கொள்ளும் வீரர்கள் விபரங்களை அறிவிக்க வரும் 31ம் தேதி கடைசி நாளாகும். இதனால் ஒவ்வொரு அணியும் எந்தெந்த வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் குஜராத் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்தீவ் படேல் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்