< Back
கிரிக்கெட்
2025 ஐ.பி.எல். தொடர்: அணிகள் தக்க வைத்த வீரர்கள் யார்..? யார்..? - முழு விபரம்
கிரிக்கெட்

2025 ஐ.பி.எல். தொடர்: அணிகள் தக்க வைத்த வீரர்கள் யார்..? யார்..? - முழு விபரம்

தினத்தந்தி
|
31 Oct 2024 7:10 PM IST

2025 ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அணியில் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை அறிவித்துள்ளன.

சென்னை,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் நவம்பர் மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அதற்கு முன்பாக தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகம் இன்று (அக்.31-ந்தேதி) மாலைக்குள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐ.பி.எல்-லில் பங்கேற்கும் அணியில் தாங்கள் தக்க வைத்துள்ள வீரர்களை அறிவித்து வருகின்றன. இதன்படி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

* சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே மற்றும் மதீசா பத்திரானா என 5 வீரர்களை அந்த அணி தக்கவைத்துள்ளது.

மீதமுள்ள பர்ஸ் தொகை : ரூ.55 கோடி

பஞ்சாப் கிங்ஸ் அணி

* இரு இளம் வீரர்களை மட்டும் தக்கவைத்து மற்ற அனைவரையும் விடுத்த பஞ்சாப் கிங்ஸ் அணி. இதன்படி சஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி), பரப்ஷிம்ரன் சிங் |(ரூ4 கோடி) இருவரை மட்டும் தக்கவைத்து, மற்ற அனைவரையும் விடுவித்தது பஞ்சாப் அணி. இதன் மூலம், எதிர்வரும் மெகா ஏலத்தில் ரூ.110.50 கோடியுடன், அதிக பர்ஸ் தொகை கொண்ட அணியாக பஞ்சாப் களமிறங்க உள்ளது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி

* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி விராட் கோலி ( ரூ. 21 கோடி), ரஜத் படிதார் ( ரூ.11 கோடி), யாஷ் தயாள் (ரூ. 5 கோடி).

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ. 83 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

* கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ரின்கு சிங் (ரூ.13 கோடி), வருண் சக்கரவர்த்தி (ரூ.12 கோடி), சுனில் நரைன் (ரூ.12 கோடி), ஆண்ட்ரே ரசல் (ரூ.12 கோடி), ஹர்ஷித் ராணா (ரூ.4 கோடி), ரமன்தீப் சிங் (ரூ.4 கோடி) )

மீதமுள்ள பர்ஸ் தொகைள் ரூ. 51 கோடி

மும்பை இந்தியன்ஸ்

* மும்பை இந்தியன்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ஜஸ்பிரித் பும்ரா (ரூ.18 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா (ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா (ரூ.16.30 கோடி), திலக் வர்மா (ரூ.8 கோடி)

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ. 45 கோடி

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

* சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி), அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி), டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி), நிதிஷ் குமார் ரெட்டி (ரூ.6 கோடி)

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ.45 கோடி

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

* லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி நிக்கோலஸ் பூரன் ( ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி), மொஹ்சின் கான் (ரூ.4 கோடி), ஆயுஷ் படோனி (ரூ.4 கோடி)

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ.69 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்

* ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி சஞ்சு சாம்சன் (ரூ.18 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ.18 கோடி), ரியான் பராக் (ரூ.14 கோடி), துருவ் ஜூரல் (ரூ.14 கோடி), ஷிம்ரோன் ஹெட்மியர் (ரூ.11 கோடி), சந்தீப் சர்மா (ரூ.4 கோடி),

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ.41 கோடி

குஜராத் டைட்டன்ஸ்

* குஜராத் டைட்டன்ஸ் அணி 5 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி ரஷித் கான் (ரூ.18 கோடி), சுப்மான் கில் (ரூ.16.50 கோடி), சாய் சுதர்சன் (ரூ.8.50 கோடி), ராகுல் தெவாடியா (ரூ.4 கோடி), ஷாருக் கான் (ரூ.4 கோடி)

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ.69 கோடி

டெல்லி கேப்பிடல்ஸ்

* டெல்லி கேப்பிடல்ஸ் 4 வீரர்களை தக்கவைத்துள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி அக்சர் படேல் (ரூ.16.50 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), அபிஷேக் போரல் (ரூ. 4 கோடி)

மீதமுள்ள பர்ஸ் தொகை: ரூ. 73 கோடி

கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் இரு அணிகள் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துள்ளதால், அந்த அணிகளால் மெகா ஏலத்தில் RTM பயன்படுத்த முடியாது. பஞ்சாப் அணி குறைந்தபட்சமாக 2 வீரர்களையும், பெங்களூரு அணி 3 வீரர்களையும், டெல்லி அணி 4 வீரர்களையும் தக்க வைத்துள்ளது. சென்னை, லக்னோ, குஜராத், மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் 5 வீரர்களை தக்கவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்