< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 கிரிக்கெட்; தொடர்ச்சியாக இரண்டு சதம்... சாதனை படைத்த சாம்சன்

Image Courtesy: @BCCI

கிரிக்கெட்

சர்வதேச டி20 கிரிக்கெட்; தொடர்ச்சியாக இரண்டு சதம்... சாதனை படைத்த சாம்சன்

தினத்தந்தி
|
8 Nov 2024 9:57 PM IST

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை சாம்சன் படைத்தார்.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் அபிஷேக் சர்மா 7 ரன்னிலும், அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 21 ரன்னிலும் அவுட் ஆகினர்.

தொடர்ந்து சஞ்சு சாம்சனுடன், திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இந்த இணை அதிரடியாக ஆடி ரன்கள் சேர்த்தது. இதில் சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனின் 2வது சதம் இதுவாகும்.

மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் சாம்சன் படைத்தார். அதிரடியாக ஆடிய சாம்சன் 50 பந்தில் 107 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மேலும் செய்திகள்